196 நாடுகளின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கும் 6 வயது சிறுவன்! #MyVikatan | This small boy can tell different country names by seeing their maps

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (18/05/2019)

கடைசி தொடர்பு:09:00 (18/05/2019)

196 நாடுகளின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கும் 6 வயது சிறுவன்! #MyVikatan

கொடியைக் காட்டினால் உலக நாடுகளின் பெயர் வரலாற்றைச் சொல்லி அசத்தும் ஆறு வயது சிறுவன்.

மனோமிதன்

1-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உலகத்தில் உள்ள 196 நாடுகளின் கொடிகளைக் காண்பித்து எந்த நாட்டின் கொடி எனக் கேட்டால் அந்நாட்டின் பெயர் அதன் தலைநகரம் மற்றும் வரலாறு என அனைத்தையும் கூறி அசத்தி வருகிறான். 

மனோமிதன்

தஞ்சாவூர் அழகம்மாள் நகரைச் சேர்ந்தவர் மனோமிதன். இவரின் அப்பா ஞானசுந்தரம் சிட்டி யூனியன் வங்கியில் பணியாற்றி வருகிறார். அம்மா சவுமியா அக்பஞ்சர் டாக்டராக இருக்கிறார். ஆறு வயதான மனோமிதன் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். மனோமிதன் உலக நாடுகள், அவற்றின் கொடி, அதன் வரலாறு எனப் பொது அறிவை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளான். இதையறிந்த அவனின் பெற்றோர்கள் பொது அறிவு தொடர்பான பயிற்சிகளை அளித்தனர்.

தற்போது மனோமிதனிடம் 196 நாடுகளின் கொடிகளில் ஒன்றைக் காண்பித்து இது எந்த நாட்டுக் கொடி எனக் கேட்டால் அந்தக் கொடியின் நாடு, அதன் தலைநகரம், அந்த நாடு உருவான வரலாறு ஆகியவற்றை உடனே கூறி அசத்தி வருகிறான்.196 நாடுகளைப் பற்றிய விவரங்களை நாக்கின் நுனியில் வைத்துள்ளான். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இதுவரை பதவி வகித்த குடியரசுத்தலைவர்கள், துணைக் குடியரசுத்தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் யார்; எத்தனை ஆண்டுகள் அவர்கள் பதவி வகித்தனர்  என்பதையும் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் துல்லியமாகக் கூறுகிறான். விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பேன் எனத் தன்னம்பிக்கையோடு தெரிவிக்கிறான் இந்த அசத்தல் சிறுவன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க