`மின் இணைப்புக்கு லஞ்சம்!’ - விஜிலென்ஸில் சிக்கிய வாலாஜாபேட்டை மின்வாரிய அதிகாரி | The electric power officer arrested by Vigilance

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (18/05/2019)

கடைசி தொடர்பு:09:35 (18/05/2019)

`மின் இணைப்புக்கு லஞ்சம்!’ - விஜிலென்ஸில் சிக்கிய வாலாஜாபேட்டை மின்வாரிய அதிகாரி

வாலாஜாபேட்டையில் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கையும் களவுமாக பிடித்துக் கைதுசெய்தனர்.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர் சரவணன். இவர், வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், அங்குள்ள அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தன்னுடைய வீட்டுக்கு மும்முனை இணைப்பு மின்சாரம் வழங்க மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, வணிக ஆய்வாளர் சரவணன், ``மின் இணைப்புக்கு 7,750 ரூபாய் அரசு நிர்ணயித்த கட்டணம். எனக்கு கமிஷன் தொகை 2350 ரூபாய். மொத்தம் சேர்த்து 10,500 ரூபாய் கொடுத்தால் உடனடியாக வேலை நடக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை 17-ம் தேதி மின்வாரிய அலுவலகத்துக்குக் கொண்டு சென்ற பாலாஜி, அதிகாரி சரவணனிடம் பணத்தைக் கொடுத்தார். அந்தப் பணத்தை லஞ்சமாகப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், சரவணனைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட மின்வாரிய அதிகாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.