``மத நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசுகிறார்” - ஹெச்.ராஜா மீது ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் | 'H.Raja's controversy speech! '- complained to the police

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (18/05/2019)

கடைசி தொடர்பு:09:06 (18/05/2019)

``மத நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசுகிறார்” - ஹெச்.ராஜா மீது ஆற்காடு காவல் நிலையத்தில் புகார்

வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் பகுதி குறித்து சர்ச்சையாகக் கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சியியைச் சேர்ந்த ஒருவர் போலீஸில் புகார் அளித்தார்.

ஹெச்.ராஜா

வேலூர் மாவட்டம், மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் தெருவைச் சேர்ந்தவர் சல்மான் (25). நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இவர், ஆற்காடு டவுன் போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ``பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார். பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் எதிராக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேல்விஷாரம் பகுதியை ‘பயங்கரவாதம்’ என்று சொல்லியிருக்கிறார். இரண்டு தொலைக்காட்சி செய்திகளில் அவரது சர்ச்சை பேச்சுகள் ஒளிபரப்பாகின. எனவே, ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

புகார் மனு

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாக்கிப் பெரிதுபடுத்தப்பட்ட நிலையில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பலர் கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்கள். இதுபோன்று, மோதல் ஏற்படுத்தும் கருத்துகளை பதிவிடும் நபர்களைக் காவல்துறையினர் கண்காணித்துவருகிறார்கள். சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயல்படும் நபர்களைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்துவருகிறார்கள்.