`அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கு வந்த மறுநாளே ரஜினி கட்சி தொடங்குவார்!’ - தமிழருவி மணியன் | Rajini will be start party when AIADMK regime end says tamilaruvi manian

வெளியிடப்பட்ட நேரம்: 21:11 (18/05/2019)

கடைசி தொடர்பு:21:37 (18/05/2019)

`அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கு வந்த மறுநாளே ரஜினி கட்சி தொடங்குவார்!’ - தமிழருவி மணியன்

“தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ அதற்கு அடுத்தநாளே ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார்” எனத் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்தார் தமிழருவி மணியன். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் தற்போது நடைபெறும் அ.தி.மு.க ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ அதற்கு அடுத்த நாளே அவர் அரசியல் கட்சியைத் தொடங்குவார். தமிழகத்தின் அரசியலில் அவர் அடியெடுத்து வைப்பதற்கு முக்கியமான காரணமே, கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சியின் ஆட்சியால் சமூகத்தின் சகல தளங்களும் பாழ்பட்டுவிட்டன. அதனால்தான் அவர் சிஸ்டம் கெட்டுவிட்டது எனக் கூறினார்.

அந்த சிஸ்டத்தைக் கெடுத்தவர்களோடு எந்தக் காலத்திலும் அவர் கூட்டணி வைக்கமாட்டார். அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கு வந்ததும் அரசியலில் தெளிவு உண்டாகும். ரஜினி கட்சி தொடங்குவது நிச்சயம். அதில் அவர் உறுதியாக இருக்கிறா. சட்டமன்றத் தேர்தல் வரும் போது,  மக்களை சந்தித்து வாக்குகள் கேட்டு, மக்களின்  ஆதரவோடு, ஆட்சிக்கட்டிலில் அமருவார் என நாங்கள் நம்புகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில், தி.மு.க-வோடும் அ.தி.மு.க-வோடும் ரஜினி கூட்டணி வைக்கும் வாய்ப்பு கொஞ்சமும் கிடையாது. அதை அவரும் விரும்பவில்லை. அப்படி இருகட்சிகளோடும் கூட்டணி வைத்துதான் அரசியலை நடத்த வேண்டும் என்ற நிலை வந்தால், ரஜினி அரசியலிலேயே அடியெடுத்து வைக்க மாட்டார்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க