தோப்பூரில் வாக்குச்சாவடி அருகே பணப்பட்டுவாடா! - திருப்பரங்குன்றம் தி.மு.கவினர் புகார் | ADMK distributes money to voters in Thiruparankundram, alleges DMK

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (19/05/2019)

கடைசி தொடர்பு:15:51 (19/05/2019)

தோப்பூரில் வாக்குச்சாவடி அருகே பணப்பட்டுவாடா! - திருப்பரங்குன்றம் தி.மு.கவினர் புகார்

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்குச்சாவடி அருகே ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்கிறார்கள், தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் வரவில்லை என்று எதிர்கட்சியினர் புகார் தெதிவித்து வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம்

மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டாவது இடைத்தேர்தல் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெறுகிறது. இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த ஏ.கே. போஸ் மரணமடைந்ததால் காலியானது. அது மட்டுமில்லாமல் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பும் அளித்தது.

இந்தநிலையில் தற்போது நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முனியாண்டியும், தி.மு.க.சார்பில் டாக்டர் சரவணனும், அ.ம.மு.க. சார்பில் மகேந்திரனும் போட்டியிடுகிறார்கள். தீவிரமான பிராசாரம், போதும் போதும் என்கிற வகையில் பண விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். 3 மணி நிலவரப்படி 56.25 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.

இதற்கிடையே தோப்பூர் வாக்குச்சாவடி அருகே, வாக்களித்து விட்டு வரும் மக்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக எதிர்க்கட்சி நிர்வாகிகள் புகார் எழுப்பியுள்ளனர். இதுபற்றி தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் வெளியூர் நபர்கள் தொகுதிக்குள் தங்கியிருந்து வாக்களிக்க கேன்வாஸ் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க