கடந்தமுறையை விடக் கூடுதலாக பதிவான 41 வாக்குகள்! - பூந்தமல்லி மறு வாக்குப்பதிவு ரிப்போர்ட் | 181 people don't cast their votes in re election

வெளியிடப்பட்ட நேரம்: 22:02 (19/05/2019)

கடைசி தொடர்பு:22:02 (19/05/2019)

கடந்தமுறையை விடக் கூடுதலாக பதிவான 41 வாக்குகள்! - பூந்தமல்லி மறு வாக்குப்பதிவு ரிப்போர்ட்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த மறுதேர்தலில் கடந்த முறையைவிட 41 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பதிவானது.
 

தேர்தல்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தனித்தொகுதிக்குட்பட்ட   கண்ணப் பாளையம் பஞ்சாயத்தில் அடங்கிய  பகுதியான மேட்டுப்பாளையம் கிராமத்தில்  வாக்குச்சாவடி எண் 195-ல் மொத்தம் வாக்குகள்  1049. ஆண்கள் 515 பெண்கள் 534. ஏப்ரல் மாதம்   நடந்து முடிந்த தேர்தலில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் 827 வாக்குகள் மட்டுமே  பதிவாகியிருந்தது. அப்போது அ.தி.மு.க வினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தி.மு.கவினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்த  அளித்திருந்தனர். 

வாக்குப்பதிவு

அதனையடுத்து இன்று அந்த மையத்தில் மறு வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலிருந்து மாலை வரை பொதுமக்கள் ஆண்கள் மற்றும்  பெண்கள் இளைஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை ஆறு முப்பது மணி நிலவரப்படி 868 வாக்குகள் மட்டுமே பதிவானது.

வாக்குப்பதிவு

 

கடந்த முறை பதிவான வாக்குகளை விட கூடுதலாக 41வாக்குகள் மட்டுமே பதிவானது. 181 பேர் வாக்களிக்கவில்லை. வாக்கு மையத்திற்கு தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணசாமி மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் வைத்தியநாதன் மற்றும் அ.ம.மு. கழக வேட்பாளர் ஏழுமலை ஆகியோர் வாக்கு மையத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் தேர்தல் முடியும் வரை அனைத்து கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அவரது ஆதரவாளர்களுடன் அந்த பகுதியில் முகாமிட்டிருந்தனர். வாக்கு பதிவு முடிந்ததும் வாக்கு பெட்டிகளை போலிசார்  பலத்த பாதுகாப்புடன் வேப்பம்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரிக்கு எடுத்து சென்றனர்.