''2, 8, 10ல் இருந்து 49!'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்! | Female police inspectors increased

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (20/05/2019)

கடைசி தொடர்பு:15:05 (20/05/2019)

''2, 8, 10ல் இருந்து 49!'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்!

காவல் துறை ஆய்வாளர்களில், பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது, சென்னை போலீஸ்.

                                போலீஸ்
பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்க பெண் காவலர்களை நியமித்தார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தற்போது, இந்தியாவிலேயே பெண் காவலர்கள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான். வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. அதன்பிறகு, பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை பிரிவும் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.

பெண் போலீஸ்

இந்நிலையில், சென்னை காவல் துறையில் பெண் இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்  2017-ல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களாக இரண்டு பெண்கள் மட்டுமே பணிபுரிந்திருக்கிறார்கள். அதுவே தற்போது எட்டாக உயர்ந்திருக்கிறது. அதேபோல், குற்றப்பிரிவு ஆய்வாளர்களாக 49 பெண்கள் பணிபுரிகிறார்கள். அதேபோல், இன்டலிஜென்ஸ் பிரிவிலும் பெண்களை அதிகரிக்க சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளது.

ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள், பயிற்சிகள்தான் கொடுக்கப்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு சரியான பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுவந்த நிலையில், சென்னை காவல் துறையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது, தமிழகம் முழுதும் எதிரொலிக்க வேண்டும்.