தனியார் பள்ளிகளை விஞ்சும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடை! | TN government changes school uniforms for government school students

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/05/2019)

கடைசி தொடர்பு:17:45 (20/05/2019)

தனியார் பள்ளிகளை விஞ்சும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடை!

அரசுப் பள்ளி

மாணவருக்குச் சீருடை என்பதே, அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கே. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களை அவர்களின் சீருடையை வைத்தே பிரித்துவிடலாம். ஆனால், தனியார் பள்ளிகளைப்போல, அரசுப் பள்ளிகளும் வண்ணமயமாக மாற வேண்டும் என்பது பல பெற்றோர்களின் விருப்பமாக இருந்தது. அவர்களின் எண்ணத்தை உணர்ந்து, தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டுக்கான புதிய சீருடைக்கான நிறங்களையும் வடிவத்தையும் அறிவித்துள்ளது.

1 முதல் 5 வகுப்புகள் வரையிலான மாணவனுக்குப் பச்சை நிற கால்சட்டையும் வெளிர்பச்சை நிறத்தில் கட்டம்போட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்குக் கரும்பச்சை நிற ஸ்கர்ட்டும், வெளிர்பச்சை நிறத்தில் கட்டம்போட்ட மேல் சட்டையும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, 6 முதல் 8 வரையிலான மாணவனுக்குச் சந்தன நிறத்தில் பேன்ட், சர்ட்டும், மாணவிகளுக்கு அதே நிறத்தில் சுடிதாரும் அதன்மேல் கோட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சீருடை வரும் கல்வியாண்டில் (2019 - 20) சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும். புதிய சீருடைகள் நிச்சயம் மாணவர்களைக் கவரும் எனும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் கல்வித் துறையைச் சார்ந்தவர்கள்.