`தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது விருந்தா?’ - விழிபிதுங்கும் அதிகாரிகள் | asudesh shukla invites police officers for dinner

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (20/05/2019)

கடைசி தொடர்பு:20:55 (20/05/2019)

`தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது விருந்தா?’ - விழிபிதுங்கும் அதிகாரிகள்

தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது, பாதுகாப்பு பிரிவு டிஜிபி விருந்துக்கு அழைத்திருப்பது அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுக்லா

தேர்தல் நடத்தை விதி தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது. இந்நேரத்தில் நாளை இரவு தமிழக தேர்தல் பாதுகாப்புப் பிரிவு டி.ஜி.பி இரவு உணவு ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அதில் கலந்துகொள்ளும்படி, முக்கியமான போலீஸ் உயர் அதிகாரிகளை அழைத்துள்ளார். அந்த அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், சுக்லா இரவு டின்னருக்கு எதற்காக அழைக்க வேண்டும் என்றும் இதன் பின்னணி என்னவென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

விருந்துக்கான அழைப்பு

இந்நேரத்தில் அரசு செலவில் எப்படி விருந்து நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். டெல்லியில் பி.ஜே.பியுடன் கூட்டணியிலிருக்கும் கட்சிகளை அழைத்து நாளை இரவு அமித் ஷா விருந்து கொடுக்கிறார். அதேபோல சுக்லாவும் நாளை இரவு முக்கிய போலீஸ் அதிகாரிகளை அழைத்து எக்மோரில் உள்ள போலீஸ் ஆபீஸர் மெஸ்ஸில் விருந்து கொடுக்கிறார். இரண்டுக்கும் ஒற்றுமையுள்ளதா என்பது தொடர்பான விவாதங்களும் எழுந்துள்ளன.