`2016-ல் தோற்பேன் என்றார்கள், நான் வெற்றி பெறவில்லையா?' - கருத்து கணிப்பு குறித்து கருணாஸ் | karnaas talks regarding exitpolls

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (21/05/2019)

கடைசி தொடர்பு:13:30 (21/05/2019)

`2016-ல் தோற்பேன் என்றார்கள், நான் வெற்றி பெறவில்லையா?' - கருத்து கணிப்பு குறித்து கருணாஸ்

அ.தி.மு.க இரண்டு கட்சிகளாகப் பிரிந்து இருப்பது மற்ற கட்சிகளுக்குச் சாதகமாக இருப்பதாக கருணாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

கருணாஸ்

மதுரையில் நாடக நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காகக் கருணாஸ் 1 லட்ச ரூபாய் வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பாண்டிக் கோயில் பகுதியில் நாடக நடிகர் சங்கக் கட்டடத்துக்காக என் சொந்த பணம் 1 லட்ச ரூபாயை வழங்கியுள்ளேன். அதற்காக மதுரை வந்தேன். இது போக கூடுதலாகப் பணம் தேவைப்படுகிறது. எனவே, தென்னிந்திய நடிகர்களை ஆலோசித்து இன்னும் கூடுதல் நிதி பெற முயற்சி செய்வேன்.

கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை மக்களிடம் நம்பிக்கைத் தன்மையை இழந்துவருகிறது. தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பொய் கணிப்புதான் இருக்கிறது. ஏன், திருவாடணை தொகுதியைக்கூட எடுத்துக்கொள்ளுங்கள் 2016-ம் ஆண்டு  நான் வெற்றி பெறுவேன் என்று ஒரு கருத்து கணிப்புகூட சொல்லவில்லை. ஆனால், கடைசியில் நான்தான் வெற்றி பெற்றேன். சபாநாயகர் கொடுத்த நோட்டீஸ் நம்பகத் தன்மை இல்லை என்றுதான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தலில் மக்கள் அவர்களுக்குப் பிடித்த ஒரு நல்ல அணியைத் தேர்ந்தெடுப்பார்கள். சசிகலாதான் கழகப் பொதுச் செயலாளர். அவர் வெளியே வந்தால்தான் கட்சியின் நிலைப்பாடு தெரியும். ஜெயலலிதாவின் கட்சி தற்போது இரண்டாகப் பிரிந்துள்ளது மற்ற கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைய வேண்டும் நாட்டில் லஞ்சங்கள் குறைய வேண்டும். மோடி ஆட்சியில் மக்கள் உட்பட, அடித்தட்டு மக்கள் இடையே மோடி கொடுத்த வாக்குறுதி சென்றடையவில்லை. இந்திய மக்கள் அமைதியாகச் சகோதரத்துடன் வாழ ஒரு நிலையான அரசு அமைய வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். இந்த தேர்தல் முடிவு பற்றிய என்னுடைய கருத்து மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தனிப்பட்ட முறையில் என்னுடைய அறிவுத்திறமையைக் காட்டுவதுபோல் நடந்துகொள்ள விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.