`விதிமுறைகளை மீறினார்..!' - திருமுருகன் காந்தி மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு | Police files case against Thirumurugan Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (21/05/2019)

கடைசி தொடர்பு:17:32 (21/05/2019)

`விதிமுறைகளை மீறினார்..!' - திருமுருகன் காந்தி மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு

டை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசினார் என்ற காரணத்துக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தி

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு ஆகிய இரண்டையும் வலியுறுத்தி மே பதினேழு இயக்கம் வீரவணக்கப் பொதுக்கூட்டம், மே 19-ம் தேதி சென்னை தி.நகரில் நடந்தது. இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவுப் பொதுக்கூட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார். அப்போது விடுதலைப் புலிகள் குறித்துப் பேசியிருக்கிறார். இதனால் அவர்மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.  தடைசெய்யப்பட்ட இயக்கம் குறித்து பேசியதற்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும்153-A மற்றும் 505 ஆகிய இரண்டு பிரிவுகளில் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

திரு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் பேசியதற்காகவும் ஏற்கெனவே திருமுருகன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதே கூடுதலாக மூன்று வழக்குகள் அவர்மீது போடப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டிருக்கிறது.