உங்களின் ஐஏஎஸ் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்க சரியான தருணம்! - சென்னையில் இலவசப் பயிற்சி முகாம் | Vikatan Publishers and Kingmakers IAS Academy conducts free seminar for IAS aspirants

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (22/05/2019)

கடைசி தொடர்பு:13:15 (22/05/2019)

உங்களின் ஐஏஎஸ் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்க சரியான தருணம்! - சென்னையில் இலவசப் பயிற்சி முகாம்

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற கனவோடு தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் அனைவருக்குமே சரியான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. சேவை மனப்பான்மை, படிக்கும் ஆர்வம், விடா முயற்சி இவை அனைத்தும் இருந்தும், சரியான வழிகாட்டுதல் இன்றி நிறைய பேர் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின்  ஐ.ஏ.எஸ் கனவை செயல் வடிவம் கொடுக்கும் வகையில், விகடன் பிரசுரம் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து, ``நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்" என்ற இலவசப் பயிற்சி முகாமை நடத்த உள்ளனர். ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்ற வழிகாட்டுதலை வழங்க உள்ளனர். இந்நிகழ்வு, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் ஜூன் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம்.

நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்
 

``நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்" கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாமில் ரயில்வே டி.ஜி.பி சைலேந்திர பாபு ஐ.பி.எஸ், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி பெனோ ஜெபின் ஐ.எஃப்.எஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அது மட்டுமல்ல, போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் ஊக்க உரையையும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்க உள்ளனர். 

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஐ.ஏ.எஸ் கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு புதிய வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும் கொடுக்கும். தேர்வு பற்றிய புரிதலைக் கொடுக்கும். கட்டணம் எதுவும் கிடையாது. எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வரும் ஜூன் 2 ம் தேதி, காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால் போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். 9444227273 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். ஐ.ஏ.எஸ் கனவுடன் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். 

நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்
 

ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் கொடுத்த சின்ன மெசெஜ்.. `` ஐ.ஏ.எஸ் கனவு உங்களுக்கு இருக்கிறது என்றால் அதை நிறைவேற்றுவது உங்கள் கடமை. அதற்கான எல்லா வசதிகளும் சென்னையில் உள்ளது. அதற்காக உங்களைத் தயார்படுத்துவதற்கு இன்றைக்கே தொடங்கிவிடுங்கள்’’. இவரின் முழு உத்வேக உரையைக் கேட்டுப் பயன்பெற  ``நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்"  பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுங்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க