`நாளை நாம் நினைத்தது நடக்கும்!’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி | We will won the election says stalin

வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (22/05/2019)

கடைசி தொடர்பு:20:52 (22/05/2019)

`நாளை நாம் நினைத்தது நடக்கும்!’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி

``நாம் அனைவரும் எதிர்பார்ப்போடு உள்ளோம். நாம் நினைத்ததுதான் நாளை நடக்கும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான 17-வது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. நாளை வாக்க்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான முடிவுகளும் வெளியாக உள்ளன. இந்த முடிவுகளைப் பொறுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புள்ளதா என்பது தெரியவரும்.  

ஸ்டாலின் ராகுல்

இந்த நிலையில்  சென்னை ராயபுரத்தில் தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``இந்த ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்போடு நடைபெறுகிறது. நாம் அனைவரும் எதிர்பார்ப்போடு உள்ளோம். நாம் நினைத்ததுதான் நாளை நடக்கும் என்றார். உறுதியாக மத்தியில் ராகுல் பிரதமர் ஆவார் என்றும், என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஊடகத்தினர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கு தி.மு.க முக்கியத்துவம் அளித்தது இல்லை.

ஊடக கருத்துக்கணிப்பு எந்த அளவுக்கு நம்பகத்தன்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட கட்சி போட்டியிடவில்லை. ஆனால், அதற்கு ஒரு வாக்கு வங்கியை ஊடகம் வெளியிட்டுள்ளது. இதுவே, அதற்கு  சாட்சி. மக்கள் கணிப்புதான் உண்மையான கணிப்பு. ஆக கருத்துக்கணிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.. நியாயமாக எடுக்கப்பட்டதா என தெரியாது.. சத்தீஸ்கர் மாநில கருத்துக்கணிப்பில் ஆம்ஆத்மிக்கு கருத்துக்கணிப்பு போடப்பட்டிருந்தது..

ஆனால், அங்கு ஆம்ஆத்மி போட்டியிடவே இல்லை என கருத்துக்கணிப்புக்கு எடுத்துக்காட்டாக மு.க.ஸ்டாலின் மேற்கோள் இட்டுப் பேசினார். ராகுல் காந்திதான் நம் பிரதமராக வருவார். மத்தியில் மட்டுமல்ல.. தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வராது. ஜனநாயக முறைப்படி தி.மு.க  ஆட்சிக்கு வரும்” என்றார். நிகழ்ச்சியில் தமிழ் மாநில தேசிய லீக்கின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.