`கருணாஸ் ஒன்றும் அரசியல் மேதை அல்ல' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்! | Karunas is not a political genius says minister rajendra balaji

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (22/05/2019)

கடைசி தொடர்பு:07:35 (23/05/2019)

`கருணாஸ் ஒன்றும் அரசியல் மேதை அல்ல' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்!

``கூட்டணிக்காக கொள்கையை விட்டுத் தர மாட்டோம்'' என பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி மற்றும் சாத்தூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற உள்ள அ.தி.மு.க கூட்டணி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ``தமிழகத்தில் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த மக்களிடம் கருத்து கேட்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை மக்கள் எதிர்க்கும் திட்டங்களை முதல்வர் ஏற்க மாட்டார். மக்களின் மனநிலைக்கு எதிராக தமிழக அரசு செயல்படாது. கூட்டணிக்காக பா.ம.க தன் கொள்கையை விட்டுத்தராது என்பதைப் போல அ.தி.மு.க-வும் கூட்டணிக்காக கொள்கையை விட்டுத் தராது.

ராஜேந்திர பாலாஜி

பா.ஜ.க கூட்டணி ஆழமான கூட்டணி. இதில் மாற்றம் வர வாய்ப்பில்லை. தேர்தலுக்குப் பின் வரும் மாற்றத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தலில் அ.ம.மு.க பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. டி.டி.வி. தினகரனை மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க-வில் தற்போது ஒரு சின்னச் சிதறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் உடையவில்லை. மோடி மீண்டும் பிரதமராக வருவார். அந்த ஆட்சியில் எடப்பாடி அரசு பங்கு வகிக்கும். அ.தி.மு.க-வைப் பற்றி கருத்துக் கூற கருணாஸ் அரசியல் மேதை அல்ல. அவர் அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளரா, உயர்மட்டக்குழு உறுப்பினரா? அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் தொடர்பில்லை.

ராஜேந்திர பாலாஜி

தேர்தலில் தோல்வியடைய உள்ளவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் சாதகமாகச் செயல்பட்டது என்பதையே கூறிவருகின்றனர்" என்றார்.