`ஒண்ணா வேலை செய்யணும்; ட்விட்டர் கணக்கு டெலிட்!' - மாதவன், சித்தார்த்தின் எலெக்ஷன் ரியாக்ஷன் | actor madhavan's request and actor sidhdharth swears

வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (23/05/2019)

கடைசி தொடர்பு:12:14 (23/05/2019)

`ஒண்ணா வேலை செய்யணும்; ட்விட்டர் கணக்கு டெலிட்!' - மாதவன், சித்தார்த்தின் எலெக்ஷன் ரியாக்ஷன்

தேர்தல் முடிவுகள் தேசம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சினிமாத் துறையில் ஒரு பிரிவினர் மோடிக்கு ஆதரவாகவும் மற்றோர் பிரிவினர் பா.ஜ.கவுக்கு எதிராகவும் பேசி வந்தனர்.  

தேர்தல்

காலை 8 மணியிலிருந்து வரும் நிலவரங்கள் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு சாதகமாக இருந்து வருகிறது. இதுகுறித்து நடிகர்களும் தங்கள் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கியுள்ளனர்.     

மாதவன்

நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசி வரும் நடிகர் மாதவன், ``பிரசாரம், முடிவுகள்னு எல்லாமே இன்னும் கொஞ்ச நேரத்துல அடங்கிடும். நாம் எல்லோரும் ஒரே நாடா இணைஞ்சு வேலை செய்ய வேண்டிய வேளை இது. இந்தியாவை ஒளிர வைக்க வேண்டும்" என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்

மாதவன்

ட்விட்டர் கணக்கை டெலிட் பண்ணிடுறேன் 

சித்தார்த்

பா.ஜ.கவை விமர்சித்து வந்த நடிகர் சித்தார்த் ``மோடிஜி இரண்டாம் முறை ஆட்சிக்கு வரவில்லை என்றால் என் ட்விட்டர் கணக்கை டெலிட் செய்து விடுவேன் எனச் சத்தியம் செய்கிறேன்" என சூசகமாகப் பதிவிட்டுள்ளார்.

சித்தார்த்