இவர் யாரென்று தெரிகிறதா? - குமரி ரிசல்ட்டால் கலங்கிய பொன்.ராதாகிருஷ்ணன் | Pon.radhakrishnan watch election results

வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (23/05/2019)

கடைசி தொடர்பு:13:19 (23/05/2019)

இவர் யாரென்று தெரிகிறதா? - குமரி ரிசல்ட்டால் கலங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கன்னியாகுமரியில் பா.ஜ.க சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் - காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலையில் உள்ளார். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  கன்னியாகுமரி பா.ஜ.க  வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், காலையிலேயே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துவிட்டார். வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு ஓரத்தில் தனியாக அமர்ந்து, தேர்தல் நிலவரங்களைத் தனது மொபைலில் பார்த்துவருகிறார். 

கன்னியாகுமரி தொகுதியைப் பொறுத்தவரை இரண்டாவது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார், சுமார் 50,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வசந்தகுமார் முன்னிலையில் இருப்பதால், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றிவாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது வசந்த குமாரை பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்திருந்தார்.  கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்துவிட்டுப் போகக்கூடிய லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணியைப் போலத்தான், இதுவரை அவர் வந்துவிட்டுப் போயிருக்கிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில், குமரி மாவட்ட மக்களின் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஓடிப்போனவர் வசந்தகுமார். அப்போது ஓடிப்போய் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிட்டு, இப்போது அந்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு இங்கு வருகிறார்’என விமர்சித்திருந்தார்.