`இது எனக்கு பெரிய அடி!’ - தேர்தல் முடிவுகள் குறித்து பிரகாஷ்ராஜ் | prakashraj on losing loksabha election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (23/05/2019)

கடைசி தொடர்பு:14:38 (23/05/2019)

`இது எனக்கு பெரிய அடி!’ - தேர்தல் முடிவுகள் குறித்து பிரகாஷ்ராஜ்

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி முன்னிலைபெற்று வருவதாகக் காட்டுகிறது.  சில தொகுதிகளில் பா.ஜ.க வென்றதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துவருகிறது.  

பிரகாஷ்ராஜ்

இந்நிலையில், பெங்களூரூ மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், இறுதி முடிவுகள் வரும் முன்னரே தனது பின்னடைவை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், ``எனக்கு இது பெரிய அடி. இன்னும் பெரிய விமர்சனங்கள், கேலிகள் என்மேல் வைக்கப்படும். நான் என் நிலையிலிருந்து மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்... நீண்டதூரம் செல்லவேண்டிய கடினமான பயணம் தொடங்கியிருக்கிறது. இதுவரை என்பால் நின்ற அனைவருக்கும் நன்றி... ஜெய்ஹிந்த்'' என்று பதிவிட்டிருக்கிறார்.    

பிரகாஷ் ராஜ்