வாக்குப்பதிவு இயந்திரத்துடன் செல்ஃபி எடுத்த காஞ்சிபுரம் இளைஞர் மீது வழக்கு | EC Cancel kanchipuram youth's after taking selfie with EVM machine

வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (23/05/2019)

கடைசி தொடர்பு:19:36 (23/05/2019)

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் செல்ஃபி எடுத்த காஞ்சிபுரம் இளைஞர் மீது வழக்கு

நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், இளைஞர் ஒருவர் தி.மு.கவிற்கு வாக்குப் பதிவு செய்து அதை செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது அவர் செலுத்திய வாக்கினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ரத்து செய்யப்படும் என்று முன்னர் அறிவித்திருந்தார்.  

வினோத்

காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் உத்தரமேரூர் அடுத்துள்ள சீயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். நாடாளுமன்றத் தேர்தலில் இவர் சீயமங்கலம் வாக்குச் சாவடியில் அவரின் வாக்கினைப் பதிவு செய்தார். அப்போது அவர் தி.மு.கவிற்கு வாக்கு அளித்ததையும், ஒப்புகைச் சீட்டு எந்திரத்தையும் செல்ஃபி எடுத்து  சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவின் கவனத்திற்கு வந்தது.

வினோத்

மாவட்ட ஆட்சியர் பொன்னையாவின் உத்தரவின் பேரில் உத்தரமேரூர் உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரி கஸ்தூரி வாலாஜாபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஏப்ரல் 22ல் வினோத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த ஓட்டுச் சாவடியில் பதிவான தி.மு.க வாக்குகளில் ஒரு வாக்கு கழிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அப்போது தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது 61வது வாக்கு மையத்தில் தி.மு.கவின் வாக்கு ஒன்றினைக் கழிக்க மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செல்ஃபி எடுத்தவரின் வாக்கினை தி.மு.கவின் எண்ணிக்கையில் கழிக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர், அந்த இளைஞர் வாக்குப்பதிவு செய்யும்போது கண்டுபிடித்திருந்தால் மட்டுமே வாக்கை ரத்து செய்ய முடியும் என்று தெரிவித்த ஆட்சியர் பொன்னையா, அவரது வாக்கு ரத்து செய்யப்படவில்லை என்று அறிவித்தார். அதேநேரம், அந்த இளைஞர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.