18 மாதத்துக்குள் ஒரு லட்சம் வாக்குகள்! - கோவையை மிரள வைத்த டாக்டர் | Dr. Mahendran crosse one lack votes in coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (23/05/2019)

கடைசி தொடர்பு:21:53 (23/05/2019)

18 மாதத்துக்குள் ஒரு லட்சம் வாக்குகள்! - கோவையை மிரள வைத்த டாக்டர்

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாகக் கோவை பார்க்கப்பட்டது. ஏற்கெனவே அங்கே இரண்டு முறை எம்.பி-யாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தியது. தீவிர பிரசாரத்தின் பலனாகப் பாரதிய ஜனதா கட்சி கோவை தொகுதியில் நல்ல ஓட்டுகளைப் பெற்றது. ஆனால், சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர். நடராஜன் 4,67,124 வாக்குகள் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். 

டாக்டர்.மகேந்திரன்

அடுத்த இடத்தில் உள்ள ராதாகிருஷ்ணன், 3,27,134 பெற்றுள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி மக்கள் நீதி மய்யம் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில், கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர்.மகேந்திரன் 1,27,234 வாக்குகளைப் பெற்று அசத்தியுள்ளார். மக்கள் நீதி மய்யம் சந்தித்த முதல் தேர்தல் இது.

மகேந்திரன்

எனினும், லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருப்பதை சாதாரண விஷயமாகப் பார்க்க முடியாது. மாற்றத்தை விரும்புபவர்களும் படித்தவர்களும் அ.ம.மு.க, நாம் தமிழர் போன்ற கட்சிகளை ஆதரிப்பதற்குப் பதிலாக மக்கள் நீதி மய்யத்தை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே பரவலாக மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 18 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க