`எனது கையொப்பம் இல்லாமல் எப்படி ரிலீஸ் செய்யலாம்! - டென்சனான குமரி கலெக்டர் | Kanniyakumari collector got tensed over result announced without his signature

வெளியிடப்பட்ட நேரம்: 22:13 (23/05/2019)

கடைசி தொடர்பு:22:14 (23/05/2019)

`எனது கையொப்பம் இல்லாமல் எப்படி ரிலீஸ் செய்யலாம்! - டென்சனான குமரி கலெக்டர்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கைப் பட்டியலை தனது கையொப்பம் இல்லாமல் அதிகாரிகள் வெளியிட்டதால் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே டென்சனானார்.

பிரசாந்த் மு.வடநேரே

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் நாகர்கோவிலை அடுத்துள்ள கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையையும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு கலெக்டர் கையொப்பமிட்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரங்கள் மீடியா சென்டர் அருகே எழுதப்பட்டன. மேலும், செய்தியாளர்களுக்கு ரிலீஸ் அனுப்பப்பட்டன. மொத்தமுள்ள 28 சுற்றுக்களில் 25 சுற்றுக்கள் வரையும் இதுபோன்றே நடந்தது. 26-வது சுற்றின் முடிவுகள் கலெக்டர் அறிவிப்பதற்கு முன்பே மீடியா சென்டர் அருகே எழுதப்பட்டதுடன், செய்தியாளர்களுக்கும் லிஸ்ட் அனுப்பப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை

இது தெரியாமல் கலெக்டர் 26-வது சுற்று வாக்கு எண்ணிக்கை விவரத்தை மைக்கில் அறிவிக்கத்தொடங்கினார். அருகில் இருந்த அதிகாரிகள் 26-வது சுற்று வாக்கு எண்ணிக்கை பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டதாக கலெக்டரிடம் கூறினர். இதனால் டென்சனான கலெக்டர், `எனது கையொப்பம் இல்லாமல் எப்படி ரிலீஸ் செய்யலாம்?' என மைக்கிலேயே வறுத்தெடுத்தார். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.