`மக்களின் நம்பிக்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம்!' - நடிகை கோவை சரளா | we going to work hard and will come back next election as super strong says kovai sarala

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (24/05/2019)

கடைசி தொடர்பு:17:35 (24/05/2019)

`மக்களின் நம்பிக்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம்!' - நடிகை கோவை சரளா

கோவை சரளா

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார், கமல்ஹாசன். தேர்தல் முடிவுகள் குறித்து, அந்த கட்சியைச் சேர்ந்த கோவை சரளாவிடம் பேசினோம்.  

கமல்ஹாசன்

``தற்போது தமிழகத்திலுள்ள கட்சிகள் பெற்றுள்ள வெற்றி, தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான். தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். எங்கள் கட்சி தொடங்கப்பட்டு ஒன்றேகால் வருடம்தான் ஆகிறது. அதற்குள் நாங்கள் மகிழ்ச்சியடையும் வகையில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். தமிழக மக்களுக்கு நன்றி!. மக்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம். மக்களுக்கு நல்லது செய்ய நாங்கள் ஆவலாக இருக்கிறோம். இனி, நாங்கள் பயணிக்கவேண்டிய பாதை குறித்து எங்கள் தலைவர் கமல்ஹாசன் சார் வழிகாட்டுவார். அடுத்த தேர்தலில் வெற்றி பெற அதிக உழைப்பைக் கொடுப்போம். தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை எங்களால் ஏற்படுத்த முடியும். அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள். மக்கள் ஆதரவை அதிகளவில் பெற, இன்னும் கடுமையாக உழைக்கப்போகிறோம்" என்கிறார் நம்பிக்கையுடன்.