`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..!’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர் | madurai poster goes viral on social media

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (25/05/2019)

கடைசி தொடர்பு:15:05 (25/05/2019)

`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..!’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்

மதுரையில் குடும்ப சண்டை காரணமாக உறவினர்கள் காதணி விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என போஸ்டர் ஒட்டி வெளிக்காட்டிய குடும்ப தலைவனின் செயல் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை போஸ்டர்

மதுரை மாநகராட்சி உட்பட்ட செல்லூர் பகுதியில் வசித்துவருகிறார் கர்ணன், இவருக்கும் இவரின் மனைவிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்னைகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் அவரின் மனைவி தங்களது குழந்தைகளுக்குக் கடந்த 22-ம் தேதி காதணி விழா ஏற்பாடு செய்துவருவதாகத் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் மனைவி நடத்தும் காதணி விழாவில் தன்னை சார்ந்த உறவினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து நூதன முறையில் போஸ்டர் ஒட்டியுள்ளார் கர்ணன்.

போஸ்டர்

காதணி விழாவில் தன் உறவினர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என மதுரை முழுதும் போஸ்டர் ஒட்டியது சமூக வளைதளங்களில் நகைச்சுவை ஏற்படுத்தி விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் இந்த சுவரொட்டியின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.