முதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன்? - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி! | what is the reason for lost the election says aiadmk member

வெளியிடப்பட்ட நேரம்: 07:53 (26/05/2019)

கடைசி தொடர்பு:12:22 (26/05/2019)

முதல்வரின் சொந்த ஊரிலே தோற்றது ஏன்? - காரணத்தை விளக்கும் அ.தி.மு.க நிர்வாகி!

கொண்டாட்டம்

முதல்வரின் சொந்த தொகுதியான எடப்பாடியில் பளபளக்கும் சாலை, 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட காவிரி குடிநீர், திரும்பிய பக்கமெல்லாம் பாலங்கள் போட்டும்  எடப்பாடி பழனிசாமி  நாடாளுமன்ற தேர்தலில் தன் சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் பஞ்சாயத்திலேயே தோற்றுள்ளார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து எடப்பாடி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் பேசியுள்ளார்.

''நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எடப்பாடியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தி.மு.க வெற்றி பெற 4 காரணங்களே மாதேஸ்வரன்முக்கியமானது.

1. தி.மு.கவினர்  100 நாள் வேலைக்குச் செல்லும் மக்களைச் சந்தித்து வங்கியில் வைத்துள்ள நகைக்கடன் மீட்கப்படும் எனக் கூறியது.

2. கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என் தெரிவித்தது. இவை இரண்டும் கிராமப்புறத்தில் உள்ள மக்களை வெகுவாக கவர்ந்தது.

3. கல்விக் கடன் வழங்கப்படும் என அறிவித்தது.இவை நகர்ப் புறத்தில் உள்ள படித்த குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

4. நலிவுற்றோர்களுக்கு மாதம் 6,000 வழங்கப்படும் என அறிவித்தது அ.தி.மு.கவின் வாக்கு வங்கியாக இருந்த அருந்ததியர் மக்களையும் மாற்றிப் போட வைத்து விட்டது. அவர்களுக்கு ரெட்டையிலையை தவிர வேறு சின்னம் தெரியாது. அவர்களையே மாற்றி விட்டார்கள்.

முதல்வரின் சொந்த ஊரில் அவர் சமுதாயத்தினர் கூட எங்க கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை. இதை அனைத்தும், தேர்தலுக்கு முன்பே அவரிடம் நாங்கள் தெரிவித்தோம். ஆனால் அண்ணன் 'அரசு ஊழியர்களுக்கே கடனை வாங்கித் தான் சம்பளம் கொடுக்கிறோம். நிச்சயம் இந்த அறிவிப்புகள் நிறைவேற்ற முடியாது. மக்களிடம் செய்வதை தான் சொல்ல வேண்டும். சொல்வதைச் செய்ய வேண்டும். தி.மு.கவை போல ஓட்டுக்காக மக்களை ஏமாற்றக் கூடாது'என்று கூறிவிட்டார். ஒருவேளை நாங்களும் தி.மு.கவை போல பொறுப்பற்று கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்'' என்றார்.