மதுரை அருகே ரவுடி கொலை - தலையை தனியாக எடுத்துச்சென்ற மர்ம நபர்கள்! | rowdy murder near madurai

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (26/05/2019)

கடைசி தொடர்பு:11:01 (26/05/2019)

மதுரை அருகே ரவுடி கொலை - தலையை தனியாக எடுத்துச்சென்ற மர்ம நபர்கள்!

மதுரையில் பிரபல ரவுடி செளந்தரின் தலையை வெட்டி சாக்கு பையில் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரவுடி செளந்தர்

மதுரை பழங்காநத்தம்  அடுத்த முத்துப்பட்டி பகுதியில் பிரபல ரவுடி சௌந்தர் நேற்று மாலை உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி கழுத்தை வெட்டி கொலை செய்தனர். மேலும் அவரது தலையை துண்டித்து சாக்கு பையில் எடுத்துக்கொண்டு கிளம்பினர். அப்போது செளந்தரின் மாமனாரையும் அந்த மர்ம கும்பல் தாக்கிவிட்டு செளந்தரின் தலையை எடுத்துக்கொண்டு போய்  சுமார் 5கிலோ மீட்டர்  தாண்டி பையுடன் தலையை இரயில்வே தண்டவாள பகுதியில் வீசிவிட்டுத் தப்பியோடினர்.

போலீஸார்

அதனை தொடர்ந்து காவல்துறையினர் செளந்தரின் உடல் மற்றும் தலையை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். செளந்தரின் மாமனாருக்கு அரசு இராசாசி மருத்துவமனை தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காவல்துறையினர் அப்குதியில் சி.சி.டி., கேமராக்கள் காட்சிகளை வைத்து முதற்கட்ட விசாரணை செய்துவருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி செளந்தர் மீது 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.