பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - அமைச்சர் செங்கோட்டையன் பதில் | There is the no changes in school reopening date, says Minister Sengottaiyan

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (27/05/2019)

கடைசி தொடர்பு:12:20 (27/05/2019)

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை அறிவிப்பு சுற்றறிக்கையிலேயே பள்ளி மீண்டும் திறக்கும் தேதி ஜூன் 3 என அறிவிக்கப்பட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதனிடையே தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பம் காரணமாக, இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

பள்ளிகள்

இதை மறுக்கும் விதமாகக் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ``கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. பள்ளிகளுக்கு அனுப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது போன்றே ஜூன் மூன்றாம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும். பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஆகும் என்பது போன்ற வதந்திகளைப் பெற்றோர்கள் நம்ப வேண்டாம். மாணவர்களின் சேர்க்கை முறை, சீருடை, பாடங்கள் கற்பிக்கும் முறையில் மாற்றம், வருகைப் பதிவேட்டில் மாற்றம் என நிறைய மாறுதல்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பாக செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என எண்ணுகிறோம்" என அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்தில் நிலவிய அதிகப்படியான வெப்பம் காரணமாக பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.