வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (08/06/2013)

கடைசி தொடர்பு:16:05 (08/06/2013)

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீசன் கலைக்கட்டியுள்ளது. கடந்த சில தினங்களாக மிதமான தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி, புலி அருவி, செண்பகாதேவி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மரங்களும், பாறைகளும் அடித்து வரப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தாலும் பிற அருவிகளில் குளிப்பதோடு மிதமான தென்றலையும் அனுபவித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்