கட்சியின் இடத்தை விற்க முயன்றாரா, கே.எஸ்.அழகிரி? போர்க்கொடி தூக்கும் கடலூர் காங்கிரஸார்! | Did KS Azhagiri try to sell the party's place Cuddalore Congress

வெளியிடப்பட்ட நேரம்: 20:58 (28/05/2019)

கடைசி தொடர்பு:14:58 (01/06/2019)

கட்சியின் இடத்தை விற்க முயன்றாரா, கே.எஸ்.அழகிரி? போர்க்கொடி தூக்கும் கடலூர் காங்கிரஸார்!

கட்சியின் இடத்தை விற்க முயன்றாரா, கே.எஸ்.அழகிரி? போர்க்கொடி தூக்கும் கடலூர் காங்கிரஸார்!

டலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான இடத்தை விற்க மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது
ஆதரவாளர்களுக்கு உடந்தையாக இருந்ததோடு, அக்கட்சி அலுவலகத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை
எனக் காங்கிரஸ் பிரமுகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

அழகிரி

``தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸுக்குச் சொந்தமான இடத்தை விற்க உடந்தையாக இருந்துள்ளார். மேலும், கடலூரில் காங்கிரஸுக்குச் சொந்தமான நேரு பவன், தற்போது தமிழ் மாநிலக் காங்கிரஸாரிடம் உள்ளது. இதை மீட்க, அவர்
 நடவடிக்க எடுக்கவில்லை" என, முன்னாள் கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயசுந்தரம் (திருநாவுக்கரசர் ஆதரவாளர்) அழகிரிமீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மிகக் கடுமையாக விமர்சித்தும் வாட்ஸ் அப்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இதையடுத்து சிதம்பரம் நகரக் காங்கிரஸ் தலைவர் பழனி, விஜயசுந்தரத்தை விமர்சித்து பதிவு போட்டுள்ளார். இதன் காரணமாக, இருதரப்பினருக்கும் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து இருவருமே தனித்தனியாக போலீஸில் புகார் செய்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரால் சிதம்பரம் காவல் நிலையமும் முற்றுகை இடப்பட்டது. 

VIJAYASUNDARAMஇதுகுறித்து விஜயசுந்தரத்திடம் பேசினோம். ``நான், மாவட்டத் தலைவராக ஆனவுடன் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் காங்கிரஸுக்குச் சொந்தமான இடம், தனி நபருக்கு விற்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இதை விற்றுள்ளனர். இதற்கு, அவரும் உடந்தை. அதை மீட்க முதல் போராட்டத்தைத் தொடங்கினேன். அப்போது, எனக்கு மங்கலம்பேட்டையில் உள்ள சில காங்கிரஸ் கட்சியினரே ஆதரவு தரவில்லை. இருந்தாலும், தொடர்ந்து போராடிவந்தேன். நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தேன். இந்நிலையில், தற்போது அந்த இடத்தை வாங்கியவர் மளிகைக் கடை வைத்து நடத்திவருகிறார்.

இதேபோல், கடலூரில் மாவட்டக் காங்கிரஸுக்குச் சொந்தமான நேரு பவன், தமிழ் மாநிலக் காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மீட்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. விருத்தாசலத்தில் பஸ் நிலையத்திற்கு அருகில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமாக 1 ஏக்கர் 8 சென்ட் இடம் உள்ளது. இதையும் விற்காமல் பாதுகாக்கப்பட வேண்டும்.  மேலும், அவர் கட்சித் தொண்டர்களின் சுக, துக்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்வதில்லை.

ஜெயராமன்தற்போது காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் பொறுப்பேற்றும்கூட எந்தவிதமான அரசியல்  நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு என்று காங்கிரஸ் தலைமையிலிருந்து ரூ 5 கோடி வந்துள்ளது, அது முறையாகச் செலவிடப்படவில்லை. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்யக் காரணமாக இருந்த அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக எப்படி இருக்க முடியும்? அவரை அந்தப் பதவியிலிருந்து எடுக்கும்வரை எனது போராட்டம் தொடரும்" என்றார்.

மங்கலம்பேட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜெயராமன், ``நிதி வசூல் செய்து, 1967-ம் ஆண்டு தேரடித் தெருவில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான இடம் வாங்கப்பட்டது. அந்த இடத்தை அழகிரி ஆதரவாளர்கள் தனி நபருக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த இடத்தில் பிரச்னை வந்தவுடன்
நீண்டகாலமாக மூடிக்கிடந்தது. பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அழகிரி பொறுப்பேற்றவுடன், அந்த இடம் விற்கப்பட்டு, தற்போது மளிகைக் கடை திறக்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்து, நான் தீ குளிக்கும் போராட்டம் அறிவித்தேன். போலீஸார் என்னைச் சமாதானப்படுத்தினார்கள். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்து இந்த இடத்தை மீட்கவேண்டும்" என்றார். 
 
மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.


டிரெண்டிங் @ விகடன்