`பூவே பூச்சூடவா’ சீரியலில் இருந்து திடீரென விலகிய தினேஷ்.. புலம்பும் ரசிகர்கள்! | Poove Poochudava Serial Dinesh quit from from Serial 

வெளியிடப்பட்ட நேரம்: 22:31 (31/05/2019)

கடைசி தொடர்பு:22:31 (31/05/2019)

`பூவே பூச்சூடவா’ சீரியலில் இருந்து திடீரென விலகிய தினேஷ்.. புலம்பும் ரசிகர்கள்!

மோடி அரசை விடவும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தங்கள் சீரியல்களில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. சில நாள்கள் முன்னர் தான் செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷியாம் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் நடிகர் சைஃப் அலி புதிதாக எண்டிரி கொடுத்திருக்கிறார். இதுக் கூட பரவாயில்லை.  சீரியலில் பொதுவாக நடிகர் நடிகைகளுக்கு தான் `இவருக்குப் பதில் இனி இவர்’ என்று மாற்றுவார்கள். ஆனால்  சமீபத்தில் செம்பருத்தி சீரியலில் இயக்குநரே மாற்றப்பட்டார். `செம்பருத்தி’ சீரியலை இயக்கி வந்த சுலைமான் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் நீராவிப் பாண்டியன் இயக்கி வருகிறார். இவருக்கு முன்னர் செம்பருத்தி சீரியலின் தயாரிப்பாளர் விலகியது தனிக் கதை. எது எப்படியோ நல்ல டி.ஆர்.பி-யுடன் தமிழ் சீரியல்களில் செம்பருத்தி எப்போதுமே டாப்பில் தான் இருக்கிறது.  

 பூவே பூச்சூடவா
 

செம்பருத்தியைத் தொடர்ந்து பூவே பூச்சூடவா சீரியலிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீரியலின் நாயகன்  தினேஷ் கோபாலசாமி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் இனி கார்த்திக் வாசு நாயகனாக நடிக்க உள்ளார். இந்த தகவலை கார்த்திக் வாசு தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ``என் அடுத்த  புராஜக்ட் பற்றி உங்கள் அனைவருக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி. என்னிடம் பலர் அடுத்து என்ன பிளான் என நிறைய கேள்விகளைக் கேட்டீர்கள். இதோ உங்களுக்கான பதில். பூவே பூச்சூடவா சீரியலில் லீட் ரோலில் நடிக்கிறேன். எப்போதும் போல உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்’’ என கார்த்திக் வாசு பதிவிட்டுள்ளார். 
அந்த பதிவுக்கு பூவே பூச்சூடவா  சீரியலின் ரசிகர்கள் சிலர் நெகடிவ் கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

 பூவே பூச்சூடவா

``எப்போதுமே எங்க சிவா பாஸ் ரோலுக்கு தினேஷ் தான் பொருத்தமானவர்.  ரேஷ்மா-தினேஷ் தான் செம  ஜோடி. தினேஷ் மட்டுமே அந்த ரோலுக்கு பொருத்தமானவர். எங்கள் மனதில் பதிந்த அவரை மாற்றிவிடாதீர்கள்’’ என ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். எதற்காக இந்த திடீர் மாற்றம் என்று விசாரித்ததில் தினேஷுக்கு மற்றொரு சீரியலில் லீட் ரோல் வாய்ப்பு வந்ததால் அவரே சீரியலில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. டிவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிவாவை ஏன் மாற்றினீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து புலம்பி வருகின்றனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க