`தற்காலிக சான்றிதழ்தான் வழங்கப்படும்!’ - ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு | tet exam certificate eligibiled only 7 years

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (01/06/2019)

கடைசி தொடர்பு:08:10 (01/06/2019)

`தற்காலிக சான்றிதழ்தான் வழங்கப்படும்!’ - ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வருகின்ற 8 மற்றும் 9-ம் தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற உள்ளது.150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கு ஆசியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிக்கு சேர்வதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். ஒரு முறை வழங்கப்படும் இந்தச் சான்றிதழை சம்பந்தப்பட்டவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். ஆனால், அந்தப் பதிவு ஏழு ஆண்டுகளுக்கு மட்டும்தான் செல்லுபடியாகும். தேர்ச்சி பெற்றவருக்கு ஏழு ஆண்டுக்குள் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை எனில், அவர் மீண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கட்டாய சட்டமாக்கப்பட்டது.

சான்றிதழ்

 

இதற்கு எதிராக டெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தரத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து, டெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் மட்டும் செல்லுபடியாகும் தற்காலிக சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ் பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்களில்  இன்னும் பணிக்குச் சேராதவர்களுக்கு இந்த ஆண்டோடு தகுதிச்சான்றிதழின் கால அவகாசம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.