`புடவை, கோட் ஓகே; நோ டி-சர்ட்!'- அரசு ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் `ஸ்ட்ரிக்ட்' உத்தரவு | TN government brought a dress code for Government Staff

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (01/06/2019)

கடைசி தொடர்பு:10:50 (01/06/2019)

`புடவை, கோட் ஓகே; நோ டி-சர்ட்!'- அரசு ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் `ஸ்ட்ரிக்ட்' உத்தரவு

அரசு ஊழியர்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தலைமைச் செயலகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில் உடைகள் அணிவது தொடர்பாக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஊழியர்கள் அனைவரும் தூய்மையான நேர்த்தியான உடை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பைப் பராமரிக்கும் வகையில் ஊழியர்களின் உடைகள் இருக்க வேண்டும்.

அரசு அலுவலகம்

பெண்கள் புடவை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகியவை மட்டுமே அணிய வேண்டும். புடவையைத் தவிர மற்ற உடைகள் அணிபவர்கள் கண்டிப்பாக துப்பட்டா அணிய வேண்டும். அதேபோல் பெண்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது புடவை, சுடிதார் போன்றவை மட்டுமே அணிய வேண்டும்.

அரசு ஊழியர் ஆடை

ஆண்களைப் பொறுத்தவரை சட்டை, பேன்ட் மட்டுமே அணிய வேண்டும். பணி நாள்களில் டி-சர்ட் அணியக் கூடாது. ஆண்களின் ஆடைகள் அடர் வண்ணத்தில் பிறரின் கண்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். ஆண்கள் தீர்ப்பாயங்களுக்குச் செல்லும்போது முழுக் கை சட்டை கொண்ட கோட் அணிந்துதான் செல்ல வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.