`மிக்க நன்றி ஜோதிமணி அவர்களே..!' - கட்சிப் பாகுபாடின்றி வாழ்த்துப் பரிமாற்றம் | `very thank you jothimani!'- nirmala sitharaman reply to M.P. jothimani wishes

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (01/06/2019)

கடைசி தொடர்பு:11:25 (01/06/2019)

`மிக்க நன்றி ஜோதிமணி அவர்களே..!' - கட்சிப் பாகுபாடின்றி வாழ்த்துப் பரிமாற்றம்

நிர்மலா சீதாராமன்
 

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையிலும் இடம்பிடித்திருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன். கடந்த முறை பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த நிர்மலாவுக்கு, இம்முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் நிர்மலாவுக்குப் பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களும் வாழ்த்துக் கூறிவருகிறார்கள்.

ஜோதிமணி

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக முதல் முறையாக வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி நிர்மலாவுக்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார். ஜோதிமணி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், `கட்சி வேறுபாடுகளைக் கடந்து, பெண்கள் உயர் பொறுப்பிற்கு வருவது மகிழ்ச்சிக்கும் பாராட்டிற்கும் உரியது. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்' என்று கூறி இறுதியில் நிர்மலாவின் பெயரையும் டேக் செய்திருக்கிறார்.  

நிர்மலா சீதாராமன்

ஜோதிமணியின் வாழ்த்துக்குப் பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், `மிக்க நன்றி, ஜோதிமணி அவர்களே...' எனக் கூறியிருக்கிறார். எதிரெதிர் கட்சியினராக இருந்தாலும், கட்சிப் பாகுபாடின்றி நிர்மலா சீதாராமன் மற்றும் ஜோதிமணி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் பயணத்தை வெளிக்காட்டுகிறது.