``நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரை தமிழர்களாக ஏற்க முடியாது!” - வேல்முருகன் | Nirmala seetharaman and jaisankar, Both can not be accepted as Tamils - velmurugan

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (01/06/2019)

கடைசி தொடர்பு:13:10 (01/06/2019)

``நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரை தமிழர்களாக ஏற்க முடியாது!” - வேல்முருகன்

``மிழகத்தின் உரிமைப் போராட்டங்களில் கலந்துகொள்ளாத யாரையும் தமிழர்களாகக் கருத முடியாது'' என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறார் நரேந்திர மோடி. அவரின் தலைமையில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இதற்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களைத் தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கருத முடியாது என விமர்சனங்களும் எழுந்துள்ளன.

நிர்மலா சீத்தாராமன்

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசும்போது,

``தமிழ்நாட்டில் பிறந்து, தமிழர்களின் உரிமை சார்ந்த போராட்டங்களிலோ, பிரச்னைகளிலோ எள் முனையளவும் பங்கு கொள்ளாத இருவர் அமைச்சர்களாக வருவதால் தமிழர்களுக்கு என்ன நன்மை. நிர்மலா சீதாராமன், ஏற்கெனவே பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். குரங்கணி தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சிக்கியிருந்தபோது என்ன உதவி செய்தார்? ஆறு மணிக்கு மேல் விமானம் பறக்காது என்று சொன்னார். தற்போது நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார். நாளை ஒகி, கஜா, வர்தா, தானே போன்ற இயற்கைச் சீற்றங்களால் தமிழக மக்கள் பாதிக்கப்படும்போது தேவையான நிதியை ஒதுக்குவாரா என்றால் இல்லை என்பதே கடந்த கால அனுபவமாக இருக்கிறது. தமிழ் மக்களின் வலியை, உணர்வுகளை, பிரச்னைகளை தீர்த்து வைக்கக் கூடியவராக இருந்தால் அவர்களை தமிழராகக் கருதலாம். தமிழ்நாட்டில் பிறந்ததால் மட்டுமே அப்படி ஏற்க முடியாது '' என்றார் அவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை