``தவறு நடக்க வாய்ப்பில்லை!" - EVM சர்ச்சை தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையர்கள் விளக்கம் | Former CEC explains over EVM issue

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (01/06/2019)

கடைசி தொடர்பு:16:02 (01/06/2019)

``தவறு நடக்க வாய்ப்பில்லை!" - EVM சர்ச்சை தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையர்கள் விளக்கம்

பதிவான வாக்குகளை விட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகரித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விளக்கமளித்துள்ளனர்.

வாககு இயந்திரம்

தேர்தல் முடிந்து, பி.ஜே.பி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் அறிவித்த முதலே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இந்த முறை பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. இந்நிலையில், நாடு முழுவதும் 370 தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்துக்கு தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் 11,கோபால்சாமி94, 440 வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், 12,12, 311 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை விட, 17,871 வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டுள்ளன.

இதுகுறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, ``வாக்குப்பதிவு மையத்திலும் அரசியல் கட்சி முகவர்கள் இருப்பார்கள். அரசியல் கட்சி முகவர்களிடம் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதைச் சொல்லிவிட்டுத்தான், வாக்குப் பதிவு இயந்திரத்தை சீல் வைப்பார்கள். அங்குப் பதிவாகியுள்ள வாக்கு விவரங்களை, முகவர்கள் குறித்து வைத்துக் கொள்வார்கள். பதிவான வாக்குகளை விட, அதிக வாக்குகள் இருந்தால் அரசியல் கட்சிகள் அப்போதே பிரச்னை செய்திருப்பார்கள். ஒவ்வொரு சூப்பர்வைசர் கண்காணிப்பில் 6 வாக்குப் பதிவு மையங்கள் இருக்கும். இந்தத் தேர்தலில், வாக்குப் பதிவு விவரங்களை மொபைல் ஆப்பில் அப்டேட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பல இடங்களில், அவர்கள் அந்த ஆப்பை பயன்படுத்துவதில் கிருஷ்ணமூர்த்திசிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுதான், வித்தியாசத்துக்குக் காரணம். மற்றபடி, தவறு நடக்க வாய்ப்பில்லை" என்றார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ``பதிவான வாக்குகளைவிட, அதிக வாக்குகள் இருக்கக் கூடாது. அதற்கான வாய்ப்பும் குறைவு. ஆனால், இதற்கான விளக்கத்தைத் தேர்தல் ஆணையம்தான் வழங்க வேண்டும்" என்பதோடு முடித்துக் கொண்டார்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்குப் பல முறை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.