`முதல்வர் பேசட்டும்!' - இந்தித் திணிப்பு கேள்வியால் நழுவிய செல்லூர் ராஜு | sellur raju talks about Hindi Imposition

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (01/06/2019)

கடைசி தொடர்பு:17:10 (01/06/2019)

`முதல்வர் பேசட்டும்!' - இந்தித் திணிப்பு கேள்வியால் நழுவிய செல்லூர் ராஜு

``தேர்தலில் தோல்வியடைந்ததால் மக்களை தி.மு.க-வினரைப்போல் நாங்கள் திட்டமாட்டோம்'' என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

செல்லூர் ராஜு

மதுரை தல்லாகுளம் பகுதியில் தமிழ்நாடு அரசு நூலகத்துறை சார்பாகக் கிளை நூலகம் திறக்கப்பட்டது. அதைத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, எம்.எல்.ஏ வி.வி.ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் திறந்துவைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, "மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பு உள்ளதாக எழுந்த புகார் குறித்து நாங்கள் பேசுவதைவிடத் தமிழக முதல்வர் பேசினால்தான் சரியாக இருக்கும். அதை அவர் பார்த்துக்கொள்வார். நடந்த முடிந்த தேர்தலின் முடிவில் உண்மை உறங்கிவிட்டது. ஆனால், பொய் ஊர்வலம் வந்துவிட்டது.

கிளை நூலகத்தில் செல்லூர் ராஜு

மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் எஜமானர்கள். மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பாக  ஏற்கிறோம். அ.தி.மு.க அரசு மீது யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக மக்களுக்கு நிறைவேற்றியிருக்கிறோம். தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் மக்களை மோசமாகத் திட்டும் குணம் கொண்டவர்கள் தி.மு.க-வினர்தான், நாங்கள் இல்லை" என்றார்.