வறட்சியால் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த நிலை! | chennai central railway station affected by drought

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (01/06/2019)

கடைசி தொடர்பு:18:00 (01/06/2019)

வறட்சியால் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த நிலை!

ப்போது சென்னைக்குள் எவ்வளவு பணம் செலவழித்தாலும் தண்ணீர் கிடைப்பது அரிதான விஷயமாகிவிட்டது. இதுபோக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாகவே மக்கள் தண்ணீர்ப் பிரச்னையால் தவித்துவருகிறார்கள். இதனால் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் செயல்களும் நடந்து வருகின்றன. ஆனால், சென்னையில் தண்ணீரின் நிலையோ இன்னும் மோசம். சென்னையைச் சுற்றி இருக்கும் ஏரிகளும் வற்றிப்போக ஆரம்பித்துவிட்டன. ஆழ்துளைக் கிணறுகளும் வற்றிப்போய் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன. இந்தத் தண்ணீர் பிரச்னை அரசு அலுவலகங்கள் வரை தொடரவே செய்கின்றன. அதற்குச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் தப்பவில்லை. இங்கு தண்ணீர் கிடைக்காமல், வெளி மாவட்டங்களிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து ரயில்களுக்கும் ரயில் நிலைய தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றன. 

சென்ட்ரல் தண்ணீர்

திருவள்ளூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ரயில் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. இந்தத் தண்ணீர் சென்ட்ரலுக்கு அருகில் உள்ள பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் உள்ள நீரேற்றும் கலனில் நிரப்பப்படுகிறது. இந்தத் தண்ணீர்தான் ரயில் நிலைய பயன்பாடுகளுக்கும் ரயில்களுக்கும் பயன்படுகிறது. கடந்த ஆண்டுகளில் அரிதாக நடந்த இந்த நிகழ்வு இப்போது வாரம் மூன்று முறை ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இந்த ரயில் மொத்தம் 8 பெட்டிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு பெட்டியிலும் 5 ராட்சத டிரம்கள் வைக்கப்பட்டுள்ளன.

சென்ட்ரல் தண்ணீர்

ஒவ்வொரு டிரம்மும் சுமார் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்டவை. மொத்தமாக ஒரு நாளைக்கு 2,00,000 லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. வாரம் மூன்றுமுறை எனக் கணக்கில் கொண்டால் 6,00,000 லிட்டர் தண்ணீர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. 

இப்போது சென்னை சந்தித்திருக்கும் தண்ணீர் பிரச்னை 'தண்ணீருக்கான நிலையான திட்டங்கள் இல்லை' என்பதையே காட்டுகிறது.