"பள்ளிகள் திறப்பு தேதியில் எந்த மாற்றமும் இல்லை!" - பள்ளிக் கல்வித்துறை | no changes in school reopening

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (01/06/2019)

கடைசி தொடர்பு:19:06 (01/06/2019)

"பள்ளிகள் திறப்பு தேதியில் எந்த மாற்றமும் இல்லை!" - பள்ளிக் கல்வித்துறை

ஜூன் மாதம் தொடங்கிவிட்டபோதிலும் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கிடையே, கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளிகள், ஜூன் 3-ம் தேதி திறப்பதாக இருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பலரும் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காகக் காத்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட பெருமளவில் வாய்ப்புள்ளது என்பதால் பள்ளிகள் திறக்கும் நாள் ஒத்திவைக்கப்படுமா எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தரப்பில் இதுகுறித்து விசாரித்தோம்.

பள்ளிகள் திறப்பு

``பள்ளிகள் திறப்பு குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை கொடுத்தாச்சு. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி கண்டிப்பாகத் திறக்கப்படும். தண்ணீர் பிரச்னைக்கு சீக்கிரமே ஒரு தீர்வு கிடைக்கும். அந்தந்தப் பள்ளியில் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஏதாவது ஒரு வழிவகை செய்வார்கள். எனவே, பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை'' என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க