`பாறையில் கேட்கும் மணி ஓசை; பரவசமடையும் பக்தர்கள்!’ - ராணிப்பேட்டை அருகே மலைக்கோயிலின் மகிமை | Famous Ranipet temple in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (02/06/2019)

கடைசி தொடர்பு:09:04 (02/06/2019)

`பாறையில் கேட்கும் மணி ஓசை; பரவசமடையும் பக்தர்கள்!’ - ராணிப்பேட்டை அருகே மலைக்கோயிலின் மகிமை

காஞ்சனகிரி மலைக்கோயிலில் உள்ள ஒரு பாறையில் கல்லைக்கொண்டு தட்டினால் மணி ஓசை கேட்கிறது. இந்த அற்புத நிகழ்வைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.

மணிப்பாறை

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டையில் உள்ள காஞ்சனகிரி மலையில் 60 ஏக்கர் பரப்பளவில் 1,008 சுயம்பு லிங்கங்கள், காஞ்சனகிரீஸ்வரர் சந்நிதி, விநாயகர் மற்றும் ஐயப்பன் சந்நிதிகள் அமைந்துள்ளன. இந்த மலையில் `மணிப் பாறை’ மற்றும் `சாம்பிராணி குகை’ இருக்கிறது. சிறிய கல்லை எடுத்து அந்த மணிப் பாறையில் தட்டினால் அற்புதமான கோயில் மணி ஓசை கேட்கிறது. இந்த ஓசையைக் கேட்டு பக்தர்கள் பரவசமடைகிறார்கள். சாம்பிராணி குகையை இப்போது பார்க்க முடியாது. இடி தாக்கியதில் குகை சேதமடைந்திருக்கிறது.

இயற்கை எழில்சூழ்ந்த காஞ்சனகிரி மலைக்கோயில்

சித்ரா பௌர்ணமியின்போது வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காஞ்சனகிரி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். மற்ற பௌர்ணமி நாள்களில் கோயிலில் யாகங்கள் நடத்தப்படுகின்றன. கோடை விடுமுறையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் மலைக் கோயிலுக்கு வந்து சென்றனர். இந்த நிலையில், இயற்கை எழில் சூழ்ந்த காஞ்சனகிரி மலைக்கோயிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.