நிறை குறைகளைத் தெரியப்படுத்துங்கள்; அது போதும்! - சர்ச்சைகளுக்கு ரவீந்திரநாத் குமார் விளக்கம்  | ops son advises his cadres about minister post controversy

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (02/06/2019)

கடைசி தொடர்பு:11:46 (02/06/2019)

நிறை குறைகளைத் தெரியப்படுத்துங்கள்; அது போதும்! - சர்ச்சைகளுக்கு ரவீந்திரநாத் குமார் விளக்கம் 

அமைச்சர் பதவி குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் விளக்கமளித்துள்ளார்.

ரவீந்திரநாத் குமார்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே நபர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார்தான். தேனி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி கூட்டணி அமைச்சரவையில் அ.தி.மு.க சார்பில் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் அந்த இடத்துக்கு அ.தி.மு.க-வில் ஒரே எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்ட ஓ.பி.எஸ் மகனுக்கு அமைச்சர் பதவியேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று பரவலாகத் தகவல்கள் அடிபட்ட நிலையில், பதவியேற்பு விழா தொடங்குவதற்கு சிறிதுநேரத்திற்கு முன் அந்த வாய்ப்பு பறிபோய்விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. 

ரவீந்திரநாத்

இருப்பினும் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக ரவீந்திரநாத் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``ஜெயலலிதா நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் மக்கள் பணி செய்வதே. அவ்வழியே எனது பயணம். தேனி மக்களவை தொகுதியில் எனது வெற்றிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எனக்கு வாக்களித்த மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதே என் தலையாய கடமை. தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது. ஆகவே, தேவையற்ற கருத்துகளைக் கூறவதை தவிர்த்து தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள நிறை குறைகளை தெரியப்படுத்துங்கள்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க