பெற்றோர் கண் முன்னால் தீக்குளித்த மகன் - காதலி எடுத்த விபரீத முடிவு! | chennai women committed suicide after lovers death

வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (02/06/2019)

கடைசி தொடர்பு:13:57 (02/06/2019)

பெற்றோர் கண் முன்னால் தீக்குளித்த மகன் - காதலி எடுத்த விபரீத முடிவு!

சென்னைக் கோவிலம்பாக்கத்தில் பெற்றோர் கண் முன்னால் மகன் தீக்குளித்து தற்கொலை செய்த தகவலைக் கேள்விப் பட்டதும் காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(22). ஏசி மெக்கானிக். கடந்த 29-ம் தேதி மணிகண்டனுக்கும் அவரின் பெற்றோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கதவை மூடி யதால் மணிகண்டன் வீட்டுக்கு வெளியில் படுத்துத் தூங்கியுள்ளார். இதனால் மனம் உடைந்த மணிகண்டன் பெற்றோர் கண்முன்னால் தீக்குளித்தார். அதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீயை அணைத்து மணிகண்டனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இன்று இறந்தார். 

இதுகுறித்து பள்ளிகரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மணிகண்டன் இறந்த தகவலை கேட்டு கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த அவரின் காதலி, அடுத்த சில மணித் துளிகளுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்தும் பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீஸார் கூறுகையில், ``மணிகண்டன், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் தினமும் அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர். சம்பவத்தன்று மணிகண்டனைப் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் தீக்குளித்த மணிகண்டனைத் தினமும் பார்க்க அவரின் காதலி மருத்துவமனைக்கு வந்துள்ளார். மணிகண்டனின் நிலைமையைப் பார்த்து அவர் கண்ணீர் விட்டுள்ளார். மனவேதனையில் இருந்த அவருக்கு மணிகண்டன் இறந்த தகவல் தெரிந்ததும் விரக்தியடைந்தார். வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்" என்றனர்.

மணிகண்டனின் உடல்நலம் மோசமானதும் அவர் இல்லாத வாழ்க்கை எனக்குத் தேவையில்லை, அவருக்கு ஏதாவது ஒன்று நடந்தால் நானும் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என மணிகண்டனின் காதலி புலம்பி உள்ளார். அதுபோல மணிகண்டன் இறந்ததும் காதலியும் உயிரை மாய்த்துக் கொண்டார் என்கின்றனர் காதலர்களின் நண்பர்கள்

ஒரே நாளில் காதலனும் காதலியும் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தினமும் மருத்துவமனைக்குச் சென்று காதலன் மணிகண்டனைச் சந்தித்துவிட்டு வந்த திவ்யா காதலன் இறந்த தகவல் அறிந்து மனமுடைந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த திவ்யா மின்விசிறி கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப் பழக்கத்தால் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவிலம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....

நீங்க எப்படி பீல் பண்றீங்க