Chennai Salem Highway: `ஆடு, மாடு, கோழி பணத்தை திங்குமா?'- எட்டு வழிச் சாலை திட்டத்தால் கொந்தளிக்கும் 80 வயசு மூதாட்டி | Let's stop a 8-way green road without loss of life.

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (03/06/2019)

கடைசி தொடர்பு:18:15 (03/06/2019)

`ஆடு, மாடு, கோழி பணத்தை திங்குமா?'- எட்டு வழிச் சாலை திட்டத்தால் கொந்தளிக்கும் 80 வயசு மூதாட்டி

8 வழிச் சாலைக்கு எதிராக போராட்டம்

சேலம் டு சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு கடந்த 1-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அதையடுத்து, சேலம் டு சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

சரசுஇன்று சேலத்தில் எட்டு வழிச் சாலையின் துவக்கப் பகுதியான அரியானூர் உத்தமசோழபுரம், நாழிக்கல்பட்டி, ராமலிங்கபுரம், குப்பனூர் ஆகிய 4 இடங்களில் சுமார் 500-க்கும்  மேற்பட்ட விவசாயிகள் கூடி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார்கள். இதற்குப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி சரசு, ``இந்த எட்டு வழிச் சாலை திட்டத்தால் எங்க நிம்மதியே போச்சு. எங்களுக்கு ரெண்டு இடத்தில் கொஞ்சம் காடு இருக்கு. அது எல்லாமே இந்த 8 வழிச் சாலை பெருமாயிதிட்டத்தில் போகுது. அந்த மண்ணுல பாடுபட்டு சாப்பிட்டோம். அந்த நிலத்தையும் அரசாங்கம் பிடிங்கிட்டா நாங்க எதைக் கண்டு சாப்பிடுவோம். இந்தத் திட்டம் வரக்கூடாது. அதற்காக உண்ணாவிரதம் இருக்கிறோம்'' என்றார்.

அருகில் இருந்த மூதாட்டி பெருமாயி, ``எனக்கு 80 வயசு ஆயிடுச்சு. இந்த வயசுல எடப்பாடியும், மோடியும் எங்களைச் சித்ரவதை செய்யறாங்க. நாங்க 4 தலைமுறையாக வாழ்ந்துகொண்டு இருக்கிற வீட்டையும், காட்டையும் கொடுத்துட்டு போங்கன்னு சொல்லறாங்க. நாங்க வளர்க்கும் ஆடு, மாடு, கோழி பணத்தை திங்குமா? இல்லை நாங்கதான் பணத்தை திங்க மோகனசுந்தரம்முடியுமா? இவுங்க கொடுக்கிற பணம் வேண்டாம். எங்க நிலத்தை யாருக்காகவும் கொடுக்க மாட்டோம்'' என்றார்.

இதுபற்றி எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம், ``சேலம் டு சென்னை எட்டு வழி பசுமைச் சாலை பற்றி விரிவாக ஆராய்ந்து இத்திட்டம் விவசாயிகளின் அழிவுத் திட்டம் என்று முடிவு செய்து நீதி அரசர்கள் இத்திட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தார்கள். ஆனால், அரசாங்கம் உயர் நீதிமன்ற நீதி அரசர்களை மதிக்காமல் உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.

அவர்களுக்கும் எங்களுடைய வேதனையும், விவசாயத்தின் தேவையும் புரிந்திருப்பார்கள். எங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்குவார்கள். எங்களுக்கு எதிரான தீர்ப்பு வந்தாலும் மக்களுக்குப் பயன்படாத இத்திட்டத்துக்காக எங்க நிலங்களை ஒருபோதும் யாருக்கும் கொடுக்க மாட்டோம். எங்க உயிரை மாய்த்தாவது இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.