`மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் புதிய பாடத்திட்டம்!’ - அமைச்சர் செங்கோட்டையன்! | new syllabus for government school

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (03/06/2019)

கடைசி தொடர்பு:19:35 (03/06/2019)

`மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் புதிய பாடத்திட்டம்!’ - அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து வகுப்புகளுக்குப் பாடப் புத்தகங்கள் மாற்றும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. இதன்படி கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் ஒன்று, ஆறு, ஒன்பது, பதினொன்றாம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தக் கல்வியாண்டில்  இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் இன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கையில்,

பாடத்திட்டம்

 

``பொதுவாக புதிய பாடத்திட்டங்கள் உருவாக்க மூன்றாண்டுகளுக்கு மேல் நேரம் தேவைப்படும். தமிழக அரசின் பாடநூல் கழகக் குழுவும் அந்த எண்ணத்துடன்தான் களமிறங்கியது. ஆனால், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு விரைவாகச் செயல்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல் மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். புதிய பாடத்திட்டங்கள் எல்லாமே மாணவர்கள் எதிர்காலத்தில் எழுதப்போகும் நுழைவுத்தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பாடங்கள் எடுக்கும் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கல்வியாண்டை தொடங்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.