`உடலை எரித்துவிடுவோம் என மிரட்டுகின்றனர்' - மார்ட்டின் ஊழியர் பழனிச்சாமி குடும்பத்தினர் வேதனை | Lottery Martin employee Palanisamy allegation over police

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (03/06/2019)

கடைசி தொடர்பு:21:25 (03/06/2019)

`உடலை எரித்துவிடுவோம் என மிரட்டுகின்றனர்' - மார்ட்டின் ஊழியர் பழனிச்சாமி குடும்பத்தினர் வேதனை

கோவை லாட்டரி மார்ட்டின் ஊழியர் பழனிச்சாமியின் உடலைப் பெறச் சொல்லி, போலீஸார் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

ஊழியர் பழனிச்சாமி உறவினர்கள்

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து, மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த பழனிச்சாமி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு மார்ட்டின்தான் என்று குற்றச்சாட்டி வந்த பழனிச்சாமி குடும்பத்தினர், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பழனிச்சாமியின் உடலுக்கு இரண்டுமுறை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பழனிச்சாமியின் மனைவி சாந்தாமணி மற்றும் மகன் ரோகின்குமார், ``மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பழனிச்சாமியின் உடலைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் அவரது உடலை எரித்துவிடப்போவதாக காரமடை உதவி ஆய்வாளர் நாகராஜ் மிரட்டுகிறார். எனவே, பழனிச்சாமியின் உடலைப் பதப்படுத்தி பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை அரசு மருத்துவமனை முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். மறு பிரேதப் பரிசோதனையில் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்படும்பட்சத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம். எங்களை எந்த அரசியல் கட்சியும் இயக்கவில்லை" என்றனர்.