``ஒரேநாளில் சரிந்த நிலத்தடி நீர்!" - ஹைட்ரோகார்பன் குறித்து இயக்குநர் சற்குணம் | Filmmaker Sarkunam about Hydrocarbon issue #WhereIsMyWater

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (04/06/2019)

கடைசி தொடர்பு:15:50 (04/06/2019)

``ஒரேநாளில் சரிந்த நிலத்தடி நீர்!" - ஹைட்ரோகார்பன் குறித்து இயக்குநர் சற்குணம்

களவாணி, வாகை சூட வா போன்ற படங்களை இயக்கிய சற்குணம், தன்னுடைய சண்டிவீரன் படத்தில் `தாய்ப்பாலும் தண்ணீரும்' என்ற பாடலை வைத்திருந்தார். அதை மையப்படுத்தி அவரிடம் நீர்ப்பற்றாக்குறை குறித்து நான் பேச தொடர்புகொண்டபோது, அவர் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஓர் அதிர்ச்சியான தகவலை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

தமிழகம் முழுக்க தண்ணீர் பஞ்சம், குடிநீர்ப் பற்றாக்குறை தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் ட்விட்டரில் #StopHydroCarbon என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாருர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பல திரைநட்சத்திரங்கள் தங்கள் எதிர்ப்பையும் கருத்தையும் கடந்த இரண்டாண்டுகளாகத் தெரிவித்தும் வருகின்றனர்.

நீர்

`களவாணி', `வாகை சூட வா' போன்ற படங்களை இயக்கிய சற்குணம், தன்னுடைய சண்டிவீரன் படத்தில் `தாய்ப்பாலும் தண்ணீரும்' என்ற பாடலை வைத்திருந்தார். அதை மையப்படுத்தி அவரிடம் நீர்ப்பற்றாக்குறை குறித்து பேசத் தொடர்புகொண்டபோது, அவர் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஓர் அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

``தஞ்சை மாவட்டத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. வேளாண்மைக்குப் பேர்போன ஊரான தஞ்சையில் கடந்த சில ஆண்டுகளாக நீர்த் தட்டுப்பாடு மிகக் கொடுமையாக இருக்கிறது. ஒருமுறை தஞ்சையின் ஒரு சுற்றுவட்டாரத்தில் ஒரே நாள், ஒரே நேரத்தில் நிலத்தடி நீர்நிலை அப்படியே சரிந்தது. விளைநிலம், வீடு என எல்லா இடங்களிலும் இருந்த எந்தப் போர்வெல்லிலும் தண்ணீர் வரவில்லை. பிறகு நாங்கள் விசாரித்தபோதுதான் எங்களுக்கு அருகே ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டியதாகத் தெரிந்தது" எனக் கூறினார்.