பிறந்த குழந்தையை முதல் நாள் குளிப்பாட்டலாமா?- மருத்துவர் விளக்கம் | baby bath... important tips for mothers! - doctor advice

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (04/06/2019)

கடைசி தொடர்பு:18:40 (04/06/2019)

பிறந்த குழந்தையை முதல் நாள் குளிப்பாட்டலாமா?- மருத்துவர் விளக்கம்

குழந்தை

குழந்தையைக் குளிப்பாட்டுவதில் இருக்கும் சில பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், நியோநேட்டாலஜிஸ்ட் சந்திர குமார்.

* ``பிறந்த முதல் நாளில் பச்சிளம் குழந்தையின் உடலில் மெழுகு போன்ற ஒரு படிவம் இருக்கும். அது குழந்தையின் உடலுக்கு கதகதப்பைக் கொடுக்கும். எனவே, பிறந்து 24 மணிநேரத்துக்குப் பிறகே குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். அதன் பின்னர் தினமும் குழந்தையைக் குளிப்பாட்டலாம்.

குழந்தை

* குழந்தையைக் குளிப்பாட்டி முடித்ததும், சாம்பிராணி புகை போடுவது, பவுடர் பூசி விடுவது, கண் மை போட்டுவிடுவதெல்லாம் அவசியமில்லாத செயல்தான்.  

* சாதாரண சோப் வகைகளைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளின் உடலில் சுரக்கும் அமிலத்தன்மைக்கு இணையாக இருக்கும் அளவில் குழந்தைக்குப் பயன்படுத்தும் சோப்பில் பி.ஹெச் அளவு 5.5 அளவில் இருக்க வேண்டும்.

* குளிக்க வைப்பதால் ஒருபோதும் குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படாது. மாறாகக் குழந்தையின் மூக்கில் நீர் புகாமல் இருக்கும்படி கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும் பெரும்பாலும் குழந்தையைக் காலில் படுக்கவைத்துத்தான் குளிப்பாட்டுவார்கள். அப்படியெனில், குழந்தையை 45 டிகிரி கோணத்தில் படுக்க வைத்து குளிப்பாட்டுவதே சிறந்தது.