வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீர் - ஒரு நாளைக்கு 25 மில்லியன் லிட்டர்! | Chennai may get 25 million litres water per day from vellore

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (04/06/2019)

கடைசி தொடர்பு:19:35 (04/06/2019)

வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீர் - ஒரு நாளைக்கு 25 மில்லியன் லிட்டர்!

சென்னைக்கு

ண்ணீர் பிரச்னை மக்களின் அன்றாட பிரச்னைகளில் ஒன்றாக மாறிவிட்டது. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னையில் காலிக் குடங்களுடன் தண்ணீர் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். சென்னையின் கடும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்குவதற்காகவும், பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் வேலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பூண்டி நீர்த்தேக்கம் உள்ளிட்ட 4 நீர்த்தேக்கங்கள் வரண்டுவிட்டன. இந்த நிலையில், 50 வேன்களில் தலா 50,000 லிட்டர் வீதம் நாள் ஒன்றுக்கு 25 மில்லியன் லிட்டா் தண்ணீர் ரயில் மூலம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையிலிருந்து தண்ணீரை சுத்திகரித்து சென்னை கொண்டுவரத் தென்னக ரயில்வே நிர்வாகத்திடம் தமிழக அரசு பேசி வருகிறது. இந்தத் திட்டத்துக்காக 154 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. 

மேலும், சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, நெம்மேலியில் மூன்றாவது கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.