`எங்கே போனது ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள்?' - வங்கி ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை | jewels are missing in KVB locker

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (04/06/2019)

கடைசி தொடர்பு:10:26 (05/06/2019)

`எங்கே போனது ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள்?' - வங்கி ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

வங்கி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே சன்னதி தெருவில் உள்ளது கரூர் வைஸ்யா வங்கி. இந்த வங்கியில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான அடமான நகைகள் காணாமல் போனது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வங்கியில், அதிக அளவில் விவசாயிகளும் வணிகர்களும், பொதுமக்களும் சேமிப்புக் கணக்கை  வைத்துள்ளனர். இதில், பெரும்பாலான விவசாயிகள் தங்களின் நகைகளை அடமானம்  வைத்து மீட்டுச் செல்வது வழக்கம். மாதம் இருமுறை அடமானம் வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு அடைமானம் வைத்த நகையை மீட்பதற்கு ஒருவர் வந்தபோது, அவரது கணக்கில் வைக்கப்பட்ட நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. அதையடுத்து, லாக்கரில் வைத்திருக்கும் நகைகள் குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 42 வாடிக்கையாளர்களின் கணக்கில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. காணாமல் போன நகைகளின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பே தங்க நகைகள் மாயமானது குறித்து  எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு வங்கி தரப்பில் இருந்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள்

இதுகுறித்து  வங்கி ஊழியர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும், வங்கி மேலாளர் சுரேஷ் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் மணி, கார்த்தி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீஸார். மேலும், இந்த நகைகளை, அடமானம் வைத்தது போன்று கணக்கு காட்டிவிட்டு வெளியே நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு வங்கி ஊழியர்களே அடமானம் வைத்துவிட்டார்களா என சந்தேகித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார்.

வங்கி

மேலும், வங்கியில் லோன் கொடுப்பதில் கையாடல் நடந்து இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனால் இங்கு பணியாற்றிய ஊழியர்களை பணியிடம் மாற்றம் செய்துள்ளதாகவும் தெரிகிறது. வங்கியில் நகை மாயமானது வெளியே தெரிந்து, அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க