இந்தி மொழியில் கட்டளையை ஏற்க மறுத்த ராமா புலிக்கு என்னாச்சு? | White tiger rama refuses to learn hindi died

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (05/06/2019)

கடைசி தொடர்பு:12:10 (05/06/2019)

இந்தி மொழியில் கட்டளையை ஏற்க மறுத்த ராமா புலிக்கு என்னாச்சு?

டந்த இரு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து உதய்ப்பூருக்கு ராமா என்ற பெயர்கொண்ட வெள்ளைப் புலி அனுப்பப்பட்டது. இந்தப் புலிக்கு தமிழ் மட்டுமே தெரியும். தமிழில் உத்தரவு போட்டால்தான் ஏற்கும். ராஜஸ்தானில், உதய்ப்பூர் வன ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியில் அவர்கள் உத்தரவிட்டதை  ராமா ஏற்க மறுத்தது.  'ராமா தமிழ்ப் புலி, அதை இந்தி கற்க  சொல்லக் கூடாது ' என்று  தமிழகத்தில் ராமா புலிக்கு ஆதரவு திரண்டது. இதைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து செல்லையா என்ற பயிற்சியாளர் உதய்ப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

இந்தி கட்டளையை ஏற்க மறுத்த ராமா புலி

செல்லையா, சில காலம் அங்கேயே தங்கியிருந்து, ராமா புலியைப் பராமரிப்பவர்களுக்கு வா, போ போன்ற  சில தமிழ் வார்த்தைகளை சொல்லிக்கொடுத்தார். சென்னை திரும்பிய பிறகும், தொடர்ந்து ராஜஸ்தானில் உள்ள ராமா புலியின் பராமரிப்பாளர்களுடன் செல்லையா தொடர்பில் இருந்தார். அப்போது,  வண்டலூரில்  11 புலிகள் இருந்தன. அவற்றை வட இந்தியாவில் உள்ள  மிருகக்காட்சி சாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் புலிகளுக்கு தமிழ் மட்டுமே தெரியும்.  புலிகளை அனுப்புவதற்கு முன்னரே, அங்கிருந்த பல  பராமரிப்பாளர்களுக்கு, கொஞ்சம் தமிழும் கற்றுக்கொடுக்கப்பட்டது. 

புலிகள் மட்டுமல்ல, கேரளாவில் இருந்து வட இந்தியாவுக்கு அனுப்பப்படும் யானைகளும் மலையாளத்தில் கட்டளையிட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும். எனவே, வட இந்திய பாகன்கள் மலையாளம் கற்றே ஆக வேண்டும்.  இந்தி கற்க மறுத்ததால், தமிழகத்தில் பாப்புலரான ராமா புலி, உதய்ப்பூரில் தற்போது உயிருடன் இல்லை.  2018-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்துவிட்டது என்பதுதான் சோகம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க