`திருத்துற, மாத்துற வேலை எங்களோடது இல்லை!' - பாடநூல் புத்தக சர்ச்சையால் பதறும் வளர்மதி | controversy erupts over TN government issued seventh standard tamil book contents

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (05/06/2019)

கடைசி தொடர்பு:19:44 (05/06/2019)

`திருத்துற, மாத்துற வேலை எங்களோடது இல்லை!' - பாடநூல் புத்தக சர்ச்சையால் பதறும் வளர்மதி

ந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற பல விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மகாகவி பாரதியின் முண்டாசின் நிறம் காவி நிறத்தில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று, தற்போது ஏழாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் சாதியைச் சொல்லி தலைவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாதி

சமச்சீர்க் கல்வியை அறிமுகப்படுத்தியபோது, மாணவர்களுக்கு சமூகப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் புத்தகத்தில் சாதியின் பெயர் இடம் பெறுவது தவறு... எனச் சொல்லி தலைவர்களின் பெயர்களின் பின்னால் இடம்பெறும் சாதியின் பெயரை நீக்கிவிட்டு பெயரை மட்டும் இடம்பெறச் செய்திருந்தனர். புதியதாக வழங்கப்பட்ட 7-ம் வகுப்புக்கான தமிழ்ப் பாடநூல் புத்தகத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரித்திருக்கிறார்கள், அவரின் சாதிப் பெயரையும் இணைத்து அந்தப் பாடத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்றும் மதுரை வைத்தியநாத ஐயர் என்றும் குறிப்பிட்டு உள்ளனர். சாதியின் பெயரை மையப்படுத்தி பாடப் புத்தகம் இருப்பதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாடநூல் இணை இயக்குநர் தரப்பிடம் விசாரித்தோம்.

சாதியை பரப்பும் நோக்கம்

''அவங்க யாருன்னு தெரியுற அடையாளத்துக்காகத்தான் அப்படி வைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். உதாரணத்துக்குக் கா.சு பிள்ளைன்னு ஒருவர் இருக்கிறார். அவரைக் கா.சுன்னு எப்படிக் குறிப்பிட முடியும்? கா.சு பிள்ளைன்னு சொன்னால்தானே தெரியும்! அதுமாதிரியான அடையாளத்துக்காக மட்டும்தான் அப்படிக் குறிப்பிட்டிருப்பாங்க'' என்றார்.

இந்த சர்ச்சை குறித்த விளக்கம் கேட்பதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதியிடம் பேசினோம். 

''உஷா ராணின்னு ஒருத்தங்க இருக்காங்க. அவங்கதான் பாடத்திட்டம் தயாரிக்கக்கூடிய துறையின் இயக்குநர். நாங்க பிரின்டிங் மட்டும் தான்! அவங்க என்ன சிடி கொடுக்குறாங்களோ அந்த சிடியை டெண்டருக்கு விட்டு பிரின்ட் போடுறது மட்டும்தான் எங்களுடைய வேலை. எல்லோரும் தவறா புரிஞ்சுகிட்டு எங்ககிட்ட கேட்குறாங்க. அவங்க என்ன கொடுக்குறாங்களோ அதை பிரின்ட் பண்றது மட்டும்தான் எங்க வேலை. அதை திருத்துறதோ, மாத்துறதோ நாங்க பண்ண முடியாது. அதுக்குன்னு ஒரு கமிட்டி இருக்காங்க. அந்த கமிட்டியோட தலைவர்தான் உஷா ராணி'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க