தண்ணீர் இல்லாத காடு! - அதிர்ச்சியூட்டும் வீடியோ #WhereIsMyWater | Ramanathapuram village, worst affected by water scarcity

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (05/06/2019)

கடைசி தொடர்பு:17:10 (05/06/2019)

தண்ணீர் இல்லாத காடு! - அதிர்ச்சியூட்டும் வீடியோ #WhereIsMyWater

வறட்சியால் கடுமையாகப்  பாதிக்கப்பட்ட மாவட்டம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது ராமநாதபுரம் மாவட்டம்தான். தண்ணீர் இல்லாத காடு என்றும் பலர் ராமநாதபுரத்தை அழைப்பதுண்டு. காரணம், இந்த மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

தண்ணீர்

ராமநாதபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வூர் கிராமம். குடிநீர் எடுப்பாதற்காக செவ்வூரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வைகை ஆற்றுப்படுக்கையில் தோன்றியுள்ள ஊற்று ஒன்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர் அந்த ஊர் பெண்கள்.

அகப்பை மூலம் சிறிது சிறிதாக ஊற்று நீரைக் குடத்தில் நிரப்புகின்றனர். ஒரு குடம் நிரப்புவதற்கு சுமார் இரண்டு மணி நேரங்கள் வரையிலும் ஆகிறது என்பதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்புகின்றனர். இரவு நேரத்திலும் தீப்பந்தம் ஏந்திச் சென்று குடிநீர் எடுக்கின்றனர். கர்ப்பிணிகள் முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் தண்ணீருக்காகக் கால் கடுக்க நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். செவ்வூர் மக்கள் குடி நீருக்காகத் தினம் தினம் திண்டாடி வருகின்றனர்.