நிபா வைரஸ் அறிகுறியுடன் இளம்பெண் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதி! - கேரளாவில் கண்காணிப்பு தீவிரம் | Another woman admitted in kerala hospital infected with nipah virus

வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (05/06/2019)

கடைசி தொடர்பு:20:53 (05/06/2019)

நிபா வைரஸ் அறிகுறியுடன் இளம்பெண் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதி! - கேரளாவில் கண்காணிப்பு தீவிரம்

கேரளத்தில் கல்லூரி மாணவர் நிபா வைரஸ் காய்ச்சலால் சிகிச்சைபெற்று வரும் நிலையில், இளம் பெண் ஒருவரும் நிபா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிபா

கேரள மாநிலத்தைக் கடந்த ஆண்டு மிரட்டிய நிபா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தை மிரட்டிய நிபா வைரஸ் இந்த முறை ஆலப்புழா மாவட்டத்துக்குப் பரவியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் வடக்கேகரயைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக சிகிச்சைபெற்று வருகிறார். வடக்கேகர ஊராட்சியில் சுகாதாரத்துறை நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், அந்த மாணவரின் உடன் படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என 311 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

நிபா

இந்த நிலையில், கொச்சியை அடுத்த வடக்கன் பறவூர் மன்னம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிறப்பு வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். நிபா வைரஸ் பாதித்ததற்கான அறிகுறிகள் தென்படுவதால் அந்த இளம் பெண்ணுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இளம் பெண்ணின் ஆரோக்கிய நிலை மோசமடையவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.